அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), கத்தார் கிளையின் பழைய மாணவர்களுக்கான றமழான் மாத ஒன்றுகூடல் வழமை போன்று இம்முறையும் MCC SUHOOR NIGHT 2024 எனும் மகுடத்தில் கடந்த 21.03.2024 திகதியன்று தோஹா கத்தாரில் உள்ள Zaatar Restaurentயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஒரே நாளில்,
ஒரே இடத்தில்,
ஓரே நேரத்தில் …
மீண்டும் எமது பழைய மாணவர்களை சந்திக்கும் அற்புதமான தருணத்தை ஏற்றப்படுத்தி தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவர்களாக… அல்ஹம்துலில்லாஹ் !
இந்நிகழ்வில் கத்தார் வாழ் பழைய மாணவர்களுக்கான இரண்டாவது T-Shirt அறிமுகம், Website அறிமுகம் உள்ளடங்கலாக கத்தார் கிளை பற்றிய ஒரு பார்வை எனும் விளக்கமும் எல்லோர் முன்னிலையில் இடம்பெற்றதுடன், எமது பாடசாலையின் பழைய மாணவன் Dr. Bathrussaman அவர்களின் சிறப்பு உரையும், பிரதான பேச்சாளராக கலந்து கொண்ட As-Sheikh ACK Mohammed Rahmani அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றமை குறிப்படத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று விஷேட அதிதிகளாக நாட்டின் பல பாகங்களை சேர்ந்த பிரபல பாடசாலைகளின் பழைய மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், 80க்கும் மேற்பட்ட எமது பாடசாலையின் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.
மேலும் இந்நிகழ்வுக்கு மீடியா தொழில்நுட்ப உதவிகளை செய்த CDF Qatar, இந்நிகழ்வுக்கு பொருளாதார ரீதியாக பங்களிப்பு செய்த எமது பழைய மாணவர்கள், அனுசரணை வழங்கிய நிறுவனங்கள் அனைவருக்கும் இப்புனித றமழான் அருள் நிறைந்ததாகவும், பறக்கத் நிறைந்ததாகவும் அமைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறோம்!
எமது பாடசாலையே, எமது பெருமை!
இந்நிகழ்வு பற்றிய புகைப்பட தொகுப்பை நீங்கள் காணலாம்….
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
பழைய மாணவர் அமைப்பு
கத்தார்கிளை.