அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ
எமது மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவோம்!
COVID 19 இன் பாதிப்பினால் எமது மாணவ, மாணவிகளின் கல்விச் செயற்பாடுகள் தடைப்படக் கூடாது எனும் உயரிய நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட online கற்பித்தல் project ஆனது இறைவனின் உதவியுடனும் எமது முயற்சியினாலும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது! அல்ஹம்துலில்லாஹ்!
இவ் online project இன் வெற்றிக்காக உழைத்த…. எமது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக முன்னின்று செயற்பட்டு கொண்டிருக்கும் UGAA, எப்போதும் எமது அன்புக்குரிய ஆசான்கள், பங்கு பற்றிய மாணவர்கள் மற்றும் பல சிரமங்களுக்கு மத்தியில் தொழில்நுட்பத்திற்கு தேவையான உதவிகளை செய்த சகோதரர்கள் அனைவருக்கும் MCC PPA Qatar Chapter நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு எம் எல்லோரினது இஹ்லாஸான முயற்சிகளையும்இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டும் என பிராரத்திக்கின்றோம்!
இவ் Online Project ஆனது அக்கரைப்பற்றில் முதன்முதலாக காலத்திற்கேற்ற வகையில் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட முன்மாதிரி project என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவ் online கற்பித்தல் project ஆனது எல்லோராலும் வரவேற்கப்பட்டமையும், பலரின் ஆதரவை பெற்றமையும் விஷேட அம்சமாகும்.
இதில் பல சிரமங்களும் சவால்களும் இருந்த போதிலும் எமது பிரார்த்தனைகளும் முயற்சிகளும் காலத்திற்கேற்ற வகையில் எம்மை தயார்படுத்த வேண்டிய கட்டாயமும் சவால்களை முறியடித்து பயணிக்க வைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
இன்ஷாஅல்லாஹ்! எமது பாடசாலையின், எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக எவ்வாறான சவால்கள் நிறைந்த சூழலையும் கடந்து செல்ல தேவையான முயற்சிகளை செய்வதில் நாம் எப்போதும் உறுதியாகவும் திடமாகவும் இருப்போம்.
MCC PPA Qatar Chapter