சமூக மேம்பாட்டிற்கான, இளம் தலைமுறை உருவாக்கத்தில் பாடசாலைகள், பெற்றோர்களின் பங்களிப்பு…

சமூக மேம்பாட்டிற்கான, இளம் தலைமுறை உருவாக்கத்தில் பாடசாலைகள், பெற்றோர்களின் பங்களிப்பு…
எனும் தலைப்பில் எமது பாடசாலையின் பழைய மாணவரான Dr Rayes Musthafa அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பித்த விஷேட அமர்வு கடந்த 13.05.2023ம் திகதி Phoenix Private School, Doha Qatar ல் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் எமது பாடசாலையின் கத்தார் வாழ் பழைய மாணவர்கள் அவர்களின் குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
மிக குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாகவும், பலரின் பாராட்டுதலுக்குரியதாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 
இறைவன் எம் எல்லோரினது முயற்சிகளையும் ஏற்றுகொள்ள வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.
 
எமது பாடசாலையே; எமது பெருமை.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி – தேசிய பாடசாலை
பழைய மாணவர்கள் அமைப்பு
கத்தார் கிளை
 
Copyright © 2025 MCC PPA Qatar Chapter | Powered by DigiFlix
Scroll to Top