அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, கத்தார் கிளை பழைய மாணவர்களின் இப்தார் ஒன்றுகூடல் கடந்த 22.042022 திகதியன்று Asian Restaurentயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கொரோனாவினால் எவ்வித பௌதிக ஒன்றுகூடலும் நடைபெறவில்லை எனும் கவலை இருந்த போதும், மிக நீண்ட காலத்திற்கு பிறகு எமது பழைய மாணவர்களை சந்தித்து அளவளாவும் அந்த அழகிய நிமிடங்களை ஏற்படுத்திதந்த இறைவனுக்கு எமது நன்றிகள். அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட 100க்கும் அதிகமான எமது பழைய மாணவர்கள், எமது அழைப்பை ஏற்று விஷேட அதிதிகளாக கலந்து கொண்ட எமது பாடசாலையின் மூத்த பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆத்மார்த்தமான நன்றிகள்!
மேலும் இந்நிகழ்வுக்கு எங்களோடு சேர்ந்து மீடியா தொழில்நுட்ப உதவிகளை செய்த Community Development Forum SriLanka, இந்நிகழ்வுக்கு பொருளாதார ரீதியாக பங்களிப்பு செய்த எமது பழைய மாணவர்கள் ஆகிய எல்லோரக்கும் இப்புனித றமழான் அருள் நிறைந்ததாகவும், பறக்கத் நிறைந்ததாகவும் அமைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறோம்!
இறுதியாக இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற தங்களது காலம், நேரம், பொருளாதாரத்தை முற்றாக அர்ப்பணித்து செயல்பட்ட கத்தார் கிளை கோடினேற்றர்கள் மற்றும் செயல்பாட்டு குழுவினர்களுக்கும் (Working Group) இப்புனிதமான றமழானில் அருளும் பறக்கத்தும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தே/பா)
பழைய மாணவர் அமைப்பு
கத்தார்கிளை.