GCE A/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை

இம்முறை GCE A/L பரீட்சை எழுதும் மாணவர்களின் அடைவை அதிகரிக்க, பழைய மாணவர் சங்கம் பலதரப்பட்ட முயறசிகளை பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் எமது பாடசாலையில் E-Tech மாணவர்களுக்கான, 6 நாள் செய்முறை பயிற்சிப்பட்டறை இன்று (26/06/2019இல்) ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்திலே திறமையான வளவாளர்கள் வருவிக்கப்பட்டு, பயிற்சிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பொறிகள் கொள்வனவு செய்யப்பட்டு இந்த பட்டறை முதல் தடவையாக நடக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் ! இதற்கு பூரண அனுசரணை வழங்கும் PPA Qatar Chapter அங்கத்தவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
இதேபோல் B-Tech மாணவர்களுக்கு, 6 நாள் செய்முறை பயிற்சிப்பட்டறை ஒன்றும் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற கிழமை ஆரம்பிக்க படவுள்ளது. எமது மாணவர்களின் அடைவு மட்ட அதிகரிப்பிற்கும் பாடசாலையின் வளர்ச்சிக்கும் எமது ஆலோசனைகளை வழங்குவோம்.
Scroll to Top