கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் முதலாவது ஒன்றுகூடல்

கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் முதலாவது ஒன்றுகூடல் (அறிமுக நிகழ்வு – An Introduction to MCC PPA Qatar Chapter) 90க்கு மேற்பட்ட பழைய மாணவர்களின் பங்குபற்றுதலுடன் 02.12.2018 அன்றிரவு 7.30PM தொடக்கம் 9.30PM வரை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் தும்ம அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வை திறம்பட நடாத்தி முடிக்க எல்லா வகையிலும் உழைத்த சகோதரர்களுக்கும், எங்களின் அழைப்பை ஏற்று (நேரடியாக, தொலைபேசி ஊடாக, சமுக வலைத்தளங்கள் ஊடாக….etc) இவ்வமர்வில் கலந்து கொண்ட அனைத்து அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கும்;
பழைய மாணவர் சங்கம் கத்தார் கிளை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்நிகழ்விற்கு சமுகமளிக்காத, பழைய மாணவர்கள் அனைவரையும் எதிர்காலங்களில் நடைபெற இருக்கும் ஒன்றுகூடல்களில் பங்கேற்று, நிகழ்ச்சிகளை மேலும் சிறப்பிக்க வேண்டும் என அன்பாக கேட்டு கொள்கிறோம்.
கடந்த ஒன்றுகூடல் பற்றிய சில புகைப்படங்களை கீழே பார்வையிட முடியும்.
MCC PPA
Qatar Chapter
Scroll to Top